நானும் எனது மனைவியும் எங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக அலைந்து கொண்டிருந்த காலம் அது.
ஒரு குழந்தையை பள்ளியில் சேர்பதென்பது சாமான்யமான காரியம் அல்ல என்பது நாங்கள் ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும் அதை அனுபவ பூர்வமாக உணரும்பொழுது மிகவும் சுவாரசியமாகவே இருந்தது.
எனது மகள் தர்ஷினி பிரியா’வை பள்ளியில் சேர்க்கும் பொழுது நடந்த சுவாரசியமான நிகழ்வுகலில் ஒன்றுதான் அவளுடைய நேர்முக தேர்வு. அந்த நேர்முக தேர்வின்போது...
ஆசிரியர் – “What is your name?”
தர்ஷினி – “My… name…. is….. தர்ஷினி….. பிரியா…”
ஆசிரியர் – ”Very good. Tell me numbers 1 to 10.”
தர்ஷினி – (மழலையின் மொழியை நினைத்துக்கொண்டு தமிழிலேயே படிக்கவும்) “ஒன், டூ, திரி, போர், பை, சிச், செவன், யெய்ட், நயன், டென்”
ஆசிரியர் – ”Very good. Sing me a Rhyme.”
தர்ஷினி – ???$$$###
ஆசிரியர் – “Twinkle Twinkle Little Star தெரியுமா? எங்க பாடு பாக்கலாம்.”
தர்ஷினி – மழலையின் குரலில் “Twinkle Twinkle Little Star” பாடினாள்.
ஆசிரியர் – “இன்னோரு rhymes பாடு பாக்கலாம்.”
தர்ஷினி – ஒன்றுக்கு மேல் பாட முடியாது என்பது போன்ற பார்வையை பதிலாக அளித்தாள்.
ஆசிரியர் தனது அருகில் இருந்த பொருட்களை ஒவ்வொன்ராக காண்பித்து அது என்ன என்று கேட்க தொடங்கினார்
ஆசிரியர் – ”இது என்ன?”
தர்ஷினி – ”Square”
ஆசிரியர் – ”இது என்ன?”
தர்ஷினி – ”Circle”
ஆசிரியர் – ”இது என்ன?”
தர்ஷினி – ”Table”
ஆசிரியர் – ”இது என்ன?”
தர்ஷினி – ”Chair”
அடுத்தபடியாக ஆசிரியர் அங்கு இருந்த ஒரு ஜன்னலை காண்பித்து ”அது என்ன?” என்றார்
தர்ஷினி – பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு விழித்துக்கொண்டிருந்தாள்.
ஆசிரியர் மீண்டும் ”அது என்ன?” என்றார்
தர்ஷினி – அதே வெறித்த பார்வைதான் பதிலாக இருந்தது
ஆசிரியர் மீண்டும் ”அது என்ன? தெறியவில்லையா” என்றார்
தர்ஷினி – தெறியவில்லை என்பது போல் தலையை அசைத்தாள்.
அடுத்தபடியாக ஆசிரியர் கேள்வியை மாற்றி கேட்கும் பொருட்டு அந்த ஜன்னலை காண்பித்து ”அது வழியாக என்ன வரும்?” என்று ஜன்னலிலிருந்து கையை உள் நோக்கி அசைத்தவாறு கேட்டார்.
தர்ஷினி – மீண்டும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஆசிரியரையும் எங்களையும் மாறி மாறி பார்த்தவாறு விழித்துக்கொண்டிருந்தாள்.
ஆசிரியர் விடாப்பிடியாக மீண்டும் அந்த ஜன்னலை காண்பித்து ”அது வழியாக என்ன வரும்?” என்று ஜன்னலிலிருந்து கையை உள் நோக்கி அசைத்தவாறு கண்களை அகல விழித்தவாரு கேட்டார்.
தர்ஷினி – இந்த கேள்விக்கு பதில் கூறாதவரை ஆசிரியர் நம்மை விட மாட்டார் என்பதை புரிந்து கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்த அறையில் மிகுந்த அமைதி நிலவியது. ஆசிரியர், குழந்தையை யோசிக்க வைத்து விட்டோம் என்ற பெருமிதத்தில் மகிழ்ச்சிப் பெருக்கில் திலைத்துக்கொண்டிருந்தார்.
தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த தர்ஷினி விடை கண்டு பிடித்து விட்ட சந்தோஷத்தில் முக மலர்ச்சியை வெளிப்படுத்தினாள்.
அந்த முக மலர்ச்சி ஆசிரியரிடமும் தொற்றிக்கொண்டதால் மீண்டும் அந்த ஜன்னலை காண்பித்து ”அது வழியாக என்ன வரும்?” என்று கேட்டார்.
தர்ஷினி தனது இரு கைகலையும் தனது முகத்திற்கு இரு புறமும் வைத்துக்கொண்டு தனது பிஞ்சு விரல்களை அசைத்தவாறு, கண்களை அகல விழித்துக்கொண்டு “பேய் வரும்” என்று கூறினாளே பார்கனும், அடுத்த வினாடி ஆசிரியரும் நாங்களும் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். எங்கள் சிரிப்பை பார்த்து தான் சரியான விடை கூறி விட்டதாக எண்ணி தர்ஷினியும் எங்களது சிரிப்பில் கலந்து கொண்டாள்.
அந்த சிரிப்புடன் மழலையின் நேர்முக தேர்வும் முடிவு பெற்றது, எங்களுக்கு பள்ளியில் இடம் தேடும் படலமும் முடிவு பெற்றது. ஆம், அந்த பள்ளியில் தர்ஷினிக்கு இடம் கிடைத்து விட்டது.

No comments:
Post a Comment